PUBLISHED ON : டிச 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒலியை முந்தும் விமானம்
நாசாவின் 'சன் ஆப் கான்கோர்டு' விமானத்தை விட வேகமாக செல்லும் 'சூப்பர்சானிக்' விமானத்தை சீனாவின் 'ஸ்பேஸ் டிரான்ஸ்போர்டேசன்' நிறுவனம் சோதனை செய்துள்ளது. வேகம் மணிக்கு 4900 கி.மீ. இது ஒலியின் வேகத்தை விட நான்கு மடங்கு அதிகம். அதே போல 'சன் ஆப் கான்கோர்டு' விமானத்தை விட 3 மடங்கு அதிகம். இது 65,500 அடி உயரத்தில் பறக்கும். இதில் சீனாவின் பீஜிங் - அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு, 2 மணி நேரத்தில் செல்லலாம். 2027 முதல் விமானம் தயாராகும். 2030ல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.