PUBLISHED ON : ஜன 15, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொசுவை ஒழிக்க புது வழி
டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள், பெண் கொசுக்களால் ஏற்படுகிறது. உருவத்தில் சிறியதாக இருந்தாலும் இவை ஏற்படுத்தும் பாதிப்பு பெரியது. இவற்றை அழிக்க, கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் பல வழிகளில் முயற்சிக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நச்சு விந்தை பரப்பும் மரபணு மாற்றப்பட்ட கொசுவை உருவாக்கியுள்ளனர். இவை, பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும் போது, நச்சை கலந்து பெண் கொசுக்களை அழிக்கிறது. இதன்மூலம் அதன் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

