PUBLISHED ON : ஜன 21, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரிசை கட்டும் கோள்கள்
சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் சூரியனை வெவ்வேறு பாதையில், வேகத்தில் சுற்றுகின்றன. இந்த அடிப்படையில் சில நேரம் ஒரே நேர்கோட்டில் கோள்கள் வரும் வானியல் நிகழ்வு தோன்றுகின்றன. இன்று (ஜன. 21) சூரிய மறைவுக்குப்பின் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என ஆறு கோள்களும் நேர் கேட்டில் வருகின்றன. அவரவர் இருப்பிடம், வானிலையைபொறுத்து இதை பார்க்கலாம். இந்நிகழ்வை பார்க்க தவறவிட்டால், அடுத்து 2025 பிப்.28ல் ஏழு கோள்கள் வருகின்றன. ஏப். 15ல் நெப்டியூன், புதன், சனி, வெள்ளி கோள்கள் வலம் வருவதை பார்க்கலாம்.

