PUBLISHED ON : மார் 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீணாகும் உணவில் கட்டடம்
வீணாகும் உணவுகளை, நோய்கிருமி இல்லாத பாக்டீரியாவுடன் கலந்து, கான்கிரீட்களில் பயன்படுத்தும் போது அதன் வலிமை இரு மடங்காகிறது. கார்பன் வெளியீட்டையும் குறைக்கிறது என இந்துார் ஐ.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது. உணவு கழிவுகள் அழுகும் போது கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது. இது
கான்கிரீட்டில் உள்ள கால்சியம் அயனிகளுடன் வினைபுரிந்து கால்சியம் கார்பனேட் படிகங்களை உருவாக்குகிறது. இவை கான்கிரீட்டில் உள்ள துளை, விரிசல்களை நிரப்பி, கான்கிரீட்டை பலப்படுத்துகிறது என தெரிவித்துள்ளது.