PUBLISHED ON : மார் 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைகிறதா ஓசோன் துளை
சூரிய ஒளியின் ஒரு பகுதியான தீமை விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து, மக்களை பாதுகாக்கும் வளையமே ஓசோன் படலம். இது கடல் மட்டத்தில் இருந்து 20 கி.மீ., - 50 கி.மீ., உயரத்தில் உள்ள
'வாயு அடுக்கு மண்டலத்தில்' உள்ளது. இதில் ஏற்பட்ட துளையை 1980களில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். குளோரோபுளுரோகார்பன் உள்ளிட்ட வாயுக்களே இதற்கு காரணம். 1985ல் அண்டார்டிகா பகுதியில் கண்டறியப்பட்ட ஓசோன் படலத்தின் துளை மெல்ல இயல்புநிலைக்கு திரும்புகிறது. 2035ல் முற்றிலும் மறையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.