PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழமையான பள்ளம்
சூரிய குடும்பம் உருவான போது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் தான் விண்கல். 1801ல் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலான விண்கல் பூமிக்கு எவ்வித ஆபத்துமின்றி கடந்து சென்று விடும். அரிதாக சில மட்டும் பூமியை தாக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உலகில் பழமையான விண்கல் பள்ளம் வடமேற்கு ஆஸ்திரேலியாவில் இருப்பதை கர்டின் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது 347 கோடி ஆண்டு பழமையானது. மணிக்கு 36 ஆயிரம் கி.மீ., வேகத்தில் இப்பகுதியில் விழுந்தது. இதனால் 100 கி.மீ., துார அகலத்துக்கு பெரிய பள்ளம் உருவாகியது.