PUBLISHED ON : பிப் 18, 2024 12:00 AM
விண்கல்லில் தண்ணீர்
பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழும் சூழல் உள்ளதா என ஆய்வு நடக்கிறது. ஏற்கனவே நிலவு, செவ்வாயில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்நிலையில் ஐரிஸ், மசாலியா என இரண்டு விண்கல்லின் மேற்பரப்பில்
தண்ணீருக்கான தடயங்கள் இருப்பதாக நாசாவின் சோபியா டெலஸ்கோப் வழியாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஐரிஸ் 199 கி.மீ., விட்டம், மசாலியா 135 கி.மீ., விட்டம் கொண்டது. இரண்டும் செவ்வாய் - வியாழன் கோள்களுக்கு இடையே உள்ளது.
தகவல் சுரங்கம்
உலகின் முதல் தேசியப்பூங்கா
அமெரிக்காவின் மொன்டானா, இடாகோ மாகாணங்களில் அமைந்துள்ளது'எல்லோஸ்டோன் தேசிய பூங்கா'. இது அந்நாட்டின் முதல் தேசிய பூங்கா. உலகின் முதல் தேசியப்பூங்காவும் இதுதான். பரப்பளவு 2200 ஏக்கர். இப்பூங்கா ஏரி, ஆறு, பள்ளத்தாக்கு, மலைகளை உள்ளடக்கியுள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 2219 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பல்வேறு வகையான பாலுாட்டிகள், பறவைகள், மீன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. இது 1978ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது.