PUBLISHED ON : மே 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலநிலை கண்காணிப்பு
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., - சி61 ராக்கெட்டில் 'இ.ஓ.எஸ்.-09' செயற்கைக்கோளை மே 18ல் விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இதன் எடை 1710 கிலோ. இது அனைத்து கால நிலைகளிலும், பூமியின் தரைப்பகுதியை இரவு, பகலாக கண்காணித்து ஆய்வு செய்யும். இதிலுள்ள அதிநவீன ரேடார் தொழில்நுட்பம் வழக்கமான மற்ற செயற்கைக் கோள்களிலிருந்து இதை வேறுபடுத்துகிறது. மேகம்,
மழை, இருள் என அனைத்தையும் ஊடுருவி ஆய்வு செய்வதே இந்த செயற்கைக் கோளின் சிறப்பம்சம். பேரிடர் மேலாண்மைக்கு இது உதவும்.