PUBLISHED ON : செப் 23, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விண்வெளிக்கு சென்ற எலிகள்
இரண்டாவது கட்ட உயிரியல் மருத்துவ பரிசோதனைகளுக்காக ரஷ்யா 'பயோ - எம் - 2' செயற்கைக்கோளை 2025 ஆக. 20ல் 'சோயுஷ் 2 -1பி' ராக்கெட்டில் விண்ணில் ஏவியது. இதில் 75 எலிகள் அனுப்பப்பட்டது. ஒரு மாத ஆய்வுக்காலத்தில் 10 எலிகள் இறந்தன. மற்ற 65 எலிகள் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரப்பட்டன. இந்த ஆய்வு நீண்ட கால விண்வெளி பயணங்களில் விலங்குகள்,
மனிதர்களுக்கு கதிர்வீச்சு உயிரியல், மருந்தியல் பாதுகாப்பு, உணவுமுறை பற்றிய நுண்ணறிவுகளை அறிந்துகொள்ள உதவும். முதல்கட்டஆய்வுக்காக 2013ல் 'பயோ - எம் - 1' செயற்கைக்கோள் ஏவப்பட்டது.