PUBLISHED ON : நவ 20, 2025 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய 'சூப்பர்' பூமி
பூமியில் இருந்து 18 ஒளி ஆண்டுகள் தொலைவில் (ஒரு ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பரவும் துாரம்) சூப்பர் பூமி கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை தெரிவித்துள்ளது. இதன் பெயர் 'ஜி.ஜே. 251சி'. இது அளவில் பூமியை போல உள்ளது. ஆனால் நிறையில் பூமியை விட நான்கு மடங்கு பெரியதாக உள்ளது. இதனால் தான் இதை 'சூப்பர்' பூமி என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இதன் வெப்பநிலை தண்ணீரை தக்க வைக்கும் அளவுக்கு இருப்பதால், இதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

