/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : போலிக்கால் உயிரினம்
/
அறிவியல் ஆயிரம் : போலிக்கால் உயிரினம்
PUBLISHED ON : செப் 06, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
போலிக்கால் உயிரினம்
அமீபா என்பது ஒற்றைச் செல் உயிரி. இவை அளவில் சிறியவை. நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். இதனுள்ளே நியூக்ளியஸ் இருக்கிறது. இது அமீபாவின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அமீபாவால் நகர, நீந்த முடியும். ஒன்று இரண்டாகிப்பின், நான்காக மாறி பகுத்து இனம் பெருக்குகிறது. இதற்கு தொடு உணர்வு உண்டு. நுண்ணிய ஊசியால் தொட்டாலோ, அதன்மீது ஒளிபடச் செய்தாலோ உணர்வு பெற்று நகர்கிறது. இதன் உடல் நிலையான உருவத்தையும், வடிவத்தையும் கொண்டது அல்ல. இவை போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.