/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : எதிர்கால 'பேன்டேஜ்'
/
அறிவியல் ஆயிரம் : எதிர்கால 'பேன்டேஜ்'
PUBLISHED ON : ஆக 11, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
எதிர்கால 'பேன்டேஜ்'
காயத்தை குணப்படுத்துவதில் 'பேன்டேஜ்' முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலை விஞ்ஞானிகள் நவீன பேன்டேஜ் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது காயங்களை, வழக்கமான பேன்டேஜை விட 30 சதவீதம் விரைவாக குணமாக்குகிறது என விலங்குகளிடம் நடத்திய சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். தண்ணீரில் இயங்கும் இந்த பேன்டேஜ் காயமடைந்த பகுதியை மின்முனைகள் மூலம் விரைவாக குணப்படுத்துகிறது. இதன் உற்பத்தியும் எளிது. இதற்கான செலவும் குறைவு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

