PUBLISHED ON : ஏப் 05, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
வானில் ஒரு 'டிராகன்'
இதுவரை கண்டறிந்த பிரகாசமான வால் நட்சத்திரங்களில் ஒன்று '12பி/பான்ஸ் - ப்ரூக்ஸ்'. இதை 1812ல் பிரான்சின் ஜீன்ஸ் லுாயிஸ் பான்ஸ் கண்டறிந்தார். அடுத்து 1883ல் அமெரிக்காவின் வில்லியம் ரோபர்ட் ப்ரூக்ஸ் கண்டறிந்தார். இதையடுத்து இது 71 ஆண்டுக்கு ஒருமுறை பூமியை நெருங்கி வருவது கண்டறியப் பட்டது. இதன்பின் 1954ல் வந்தது. தற்போது 2024
ஜூன் 21ல் பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது. அப்போது இதை டெலஸ்கோப் மூலம் பார்க்கலாம். இம்முறை இதை தவறவிட்டால் அடுத்து 2095ல் தான் பார்க்க முடியும்.
தகவல் சுரங்கம்
தேசிய கடல்சார் தினம்
இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான 'எஸ்.எஸ்.லாயல்டி', 1919 ஏப்., 5ல் மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை நினைவுகூறும் வகையில் அந்நாளே தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய கப்பல் துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம். இந்திய கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ., நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கப்பல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வெளிநாட்டு ஏற்றுமதியில் 90 சதவீதம் துறைமுகம் மூலமே நடைபெறுகிறது. இந்தியாவில்
13 பெரிய துறைமுகங்கள் உள்ளன.

