/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 08, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
தாகம் தீர்க்கும் தண்ணீர்
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் காலத்தில் உடலில் நீர்சத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு உணவும் உடலுக்குள் சென்றால், உடலின் வெப்பநிலையை அடைய வேண்டும். வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்கு வந்ததும் குளிர்ந்த நீர், மென்பானம் அருந்துவது தவறு. அது உடலின் வெப்பநிலையை அடைய, கலோரிகளை உடலில் இருந்து தான் எடுக்கிறது. மென்பானங்களில் பழத்தின் சுவை, மணம், நிறம் இருக்கும். சத்துக்கள் குறைவு. எனவே சாதாரண தண்ணீரே நல்லது.
தகவல் சுரங்கம்
பெரிய அறிவியல் மையம்
டில்லியில் உள்ள தேசிய அறிவியல் மையம், ஆசியாவில் பெரியது. 1992ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது ஒரு அறிவியல் மியூசியமாக செயல்படுகிறது. அறிவியல், கட்டடக்கலை, வரலாறு என 3 பிரிவுகள் உள்ளன. இங்கு மனித உயிரியல், டைனோசர், விளையாட்டு அறிவியல், புராதன இந்திய அறிவியல் பிரிவுகளில் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஐந்து லட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர்.

