PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
தனிமங்கள் எத்தனை
பள்ளி முதல் பெரிய ஆய்வுக் கூடங்கள் வரை தனிம அட்டவணை முக்கிய பங்கு வகிக்கிறது. 1869ல் ரஷ்யாவின் டிமிட்ரி மெண்டலீவ் முதன்முதலாக வடிவமைத்தார். இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது. பின் அமெரிக்காவின் மோஸ்லே, தனிமங்களின் அணு எண்ணை கண்டறிந்தார். அணு நிறையை காட்டிலும், அணு எண்களே அடிப்படை பண்பு என நிரூபித்தார். இதில் தனிமங்கள் அணு எண்ணுக்கு ஏற்ப, ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். மொத்தம் 118 தனிமங்கள் பட்டியலில் உள்ளன.
தகவல் சுரங்கம்
இடம் மாறும் தீவு
உலகில் பல தீவுகள் உள்ளன. இவை ஏதாவது ஒரு நாட்டுக்கு சொந்தமானதாக இருக்கும். ஆனால் ஒரு தீவு, ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாடு மாறுகிறது. ஐரோப்பாவில் பிரான்ஸ்--- - ஸ்பெயின் இடையே இயற்கையான எல்லையாக பீடாசோவ் ஆறு உள்ளது. இது ஸ்பெயின் - பிரான்சை பிரித்து பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றின் நடுவில் பீசன்ட் தீவு உள்ளது. இது
பிப்.1 -- ஜூலை 31 ஆறு மாதம் பிரான்சிடமும், ஆக.1 -- ஜன.31 அடுத்த ஆறு மாதம் ஸ்பெயினிடமும் மாற்றப்படுகிறது. இது 660 அடி நீளம், 130 அடி அகலம் கொண்டது.

