/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 20, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
மின்னும் தாவரம்
இரவில் வெளிச்சம் உமிழ்ந்தபடி பறக்கும் மின்மினிப்பூச்சிகளைப் பார்த்திருப்போம். அதுபோல தாவர இனங்களில் இரவு நேரத்தில் ஒளிரும் தன்மையுடையது'பாக்ஸ்பையர்' என்ற பூஞ்சைத் தாவரம். மட்கும் மரங்களில் வளரும் இவை, எதிரிகளிடமிருந்து காத்து கொள்ளவும், இனப்பெருக்கத்துக்காகப் பூச்சிகளைத் தங்கள் பக்கம் கவர்ந்து இழுக்கவும் ஒளியை உமிழ்கின்றன. இந்த ஒளி நீலமும், பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும்.பூஞ்சைகளின் உடலில் இருக்கும் வெவ்வேறு வேதியியல் மூலக்கூறுகள் ஒன்று சேர்வதே ஒளி ஏற்படக் காரணம். இதற்கு வெப்பம் தேவைப்படுவதில்லை.
தகவல் சுரங்கம்
பழமையான வங்கி
இத்தாலியின் சியன்னா நகரில் 'மான்டி டெய் பாச்சி டி சியன்னா' வங்கி செயல்படுகிறது. இது 1472ல் தொடங்கப்பட்டு, 522 ஆண்டுகளை கடந்து செயல்படுகிறது. இதுதான் உலகில் இன்றும் செயல்படும் பழமையான வங்கி. பிரான்சில் 1368 கிளைகள், வெளிநாடுகளில் 11 கிளைகள் உள்ளன. 21,244 பேர்பணியாற்றுகின்றனர். 35 லட்சம் வாடிக்கையாளர்கள்இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். இது இத்தாலியின் ஐந்தாவது பெரிய வங்கி. உலகின் இரண்டாவது பழமையானது ஜெர்மனியின் 'பெரன்பெர்ஹ் வங்கி'. 1590ல் தொடங்கப்பட்டது.

