/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 21, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
நிறமில்லாத ரத்தம்
மனிதர்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின், சிவப்பணுக்கள் இருப்பதால் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆனால் எறும்பு, கொசு போன்ற பூச்சியினங்களில் இருக்கும் உயிர் திரவத்துக்கு, 'குருதிநிணம்' என பெயர். இதில் பல்வேறு சத்து, ஹார்மோன்கள் உள்ளன. இத்திரவத்தில்சிவப்பணுக்கள், ஹீமோகுளோபின் கிடையாது. இதனால் நம் ரத்தத்தைப்போல் அது சிவப்பாக இருக்காது. இந்த உயிரினங்கள் அப்போது எந்தத் தாவர உணவை சாப்பிட்டு இருக்கின்றன என்பதைப் பொறுத்து அதன் ரத்தத்தின் நிறம் உண்டாகும். மற்றபடி பூச்சிகளின் ரத்தத்துக்கு நிறமில்லை.
தகவல் சுரங்கம்
குடிமை பணிகள் தினம்
இந்தியாவின் வளர்ச்சியில் ஐ.ஏ.எஸ்., / ஐ.பி.எஸ்., / ஐ.ஆர்.எஸ்.,/ ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் (குடிமை பணி) அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. 1947 ஏப்.,21ல் டில்லி 'மெட்கால்பே' இல்லத்தில் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல், சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் முதல் குழுவிடம் (பேட்ஜ்) உரையாற்றினார். இதை நினைவுபடுத்தும் விதமாக 2006ல் ஏப்.21ல் தேசிய குடிமை பணிகள் தினம் தொடங்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றும்சிவில் சர்வீஸ் அதிகாரிகளை கவுரவிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

