/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 25, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
கொசுவுக்கு பிடிக்காத நிறம்
உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அவை (கொசுக்கள்) ஏற்படுத்தும் சுகாதார பாதிப்பு அதிகம். நம் வியர்வை, சுவாசம், உடல் வெப்பநிலை என மூன்றும் தான் கொசு கடிப்பதற்கான அடிப்படை காரணி. நான்காவதாக சிவப்பு நிறம் அடங்கியுள்ளது. இது ஆடையில் மட்டுமல்ல, தோலின் நிறத்தையும் குறிக்கிறது. இந்நிலையில் பச்சை, ஊதா, நீலம், வெள்ளை ஆகிய 4 நிறங்களை கொசுக்கள் தவிர்த்து விடுகின்றன. எனவே இந்த கோடையில் இந்த நான்கு நிறங்களுடைய ஆடை அணியலாம் என அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம்
உலக தைராய்டு தினம்
உலகில் 20 கோடி பேர் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பு. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதி மையத்தில் அமைந்திருக்கும். உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது உடலில் உள்ள திசுக்கள், செல்கள், மூளை, இதயம் போன்றவை இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது. இப்பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மே 25ல் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

