உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 14, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
செவ்வாயில் ரத்தினங்கள்
அமெரிக்காவின் ‘நாசா’ அனுப்பிய ‘பெர்சிவிரன்ஸ்‘ ரோவர் 2021 பிப். 18ல் இருந்து செவ்வாய் கோளின் மேற்பரப்பில் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாயின் ஜெஜீரோ கிரேட்டர் பகுதியில் உள்ள பாறையின் மீது இந்த ரோவரின் லேசர் கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்ததில், பூமியில் உள்ள ரத்தினக் கற்களுடன் தொடர்புடைய கனிமங்கள் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் இருப்பதை ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், பாறை பிளவுகள் வழியாக சூடான நீர் பாய்ந்தபோது இந்தத் தாதுக்கள் உருவாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
