உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 03, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
விதைகள் 1 முதல் 3 நாட்கள் வரை முளைக்க வைக்கப்பட்டு, இலைகள் பெரிதாக வளரும் முன்பே உண்பதற்கு தயாராகி விடுபவை தான் நுண்கீரைகள். இவை சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளியின் கீழ் மண், மக்கிய உரம் அல்லது தேங்காய் நார் போன்ற மண்ணற்ற ஊடகத்தில் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் தண்டுகளும் இலைகளும் மட்டுமே வேருக்கு மேலே கிள்ளி உண்ணப்படுகின்றன.
அதே போல பேபி கிரீன்ஸ். இவை நுண்கீரைகளை விடப் பெரியதாக வளரும்போது அறுவடை செய்யப்படுகின்றன. காய்கறிகளை விட சத்துகள் நிறைந்தவை.
