உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 23, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
கடல் நீரில் சராசரியாக 3.5 சதவீதம் அளவுக்கு உப்புகள் கரைந்துள்ளன.
இதில் 85 சதவீதம் சோடியம், குளோரைடு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பாறைகள், மணலை கரைத்துக்கொண்டு மழைநீர் ஆறுகளில் சேர்கிறது. இப்படி வரும்போது வழியில் பாறைகள், மணலில் உள்ள தாது, உப்புகளை எடுத்துக் கொண்டு சென்று கடலில் சேர்க்கிறது. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. ஆனால் உப்பு மட்டும் கடலிலேயே தங்கிவிடுகிறது. கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடிப்புகள், நீரூற்றுகள் மூலமாகவும் நேரடியாக தாதுக்களும் உப்புகளும் கடலில் சேர்க்கப்படுகின்றன.
