/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தண்ணீரே ஆக்சிஜன்
/
அறிவியல் ஆயிரம் : தண்ணீரே ஆக்சிஜன்
PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
தண்ணீரே ஆக்சிஜன்
மனிதர்களால் நீருக்குள் சுவாசிக்க முடியாது. ஆனால் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் இதற்கான உடல் தகவமைப்பை பெற்றுள்ளன. நமக்கு நுரையீரல் போல மீன்களுக்கு செவுள்கள் (கில்ஸ்) உள்ளன. இவை ஆக்சிஜனை பிரித்து எடுத்துக்கொண்டு, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. இதன்படிதான் அதன் சுவாசம் நடைபெறுகிறது. கடல் மீன்களின் வாய் வழியாக உள்ளே செல்லும் நீர், செவுள்களில் இருக்கும் நுண்ணிய துகள் வழியாக ஆக்சிஜனை உறிஞ்சி ரத்தத்தில் சேர்க்கிறது. நன்னீர் மீன்கள், செவுள்கள் வழியாகவே தண்ணீரை உள்வாங்கிச் சுவாசிக்கின்றன.

