/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : டால்பின் சிரிக்குமா...
/
அறிவியல் ஆயிரம் : டால்பின் சிரிக்குமா...
PUBLISHED ON : அக் 09, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
டால்பின் சிரிக்குமா...
பெரும்பாலான பாலுாட்டிகள் தண்ணீருக்கு மேலே துள்ளி வரும்போது புன்னகை செய்கின்றன. மேலும் மனிதர்களைப்போல ஒன்றுக்கொன்று புன்னகைத்து கொள்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. டால்பின் கடலில் வாழும் பாலுாட்டி இனம். நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம். 40 வகைகள் உள்ளன. சில ஆற்று நன்னீரிலும் வாழும். ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணப்படும். சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டு. அறிவுக்கூர்மை வாய்ந்தவை. நீளம் 25 அடி. எடை 650 கிலோ. குறைந்த துாரத்தில் மணிக்கு 40 கி.மீ., நீண்டதுாரத்தில் 11 கி.மீ., வேகத்தில் செல்லும்.