/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : டெங்குவை ஒழிக்க யோசனை
/
அறிவியல் ஆயிரம் : டெங்குவை ஒழிக்க யோசனை
PUBLISHED ON : நவ 09, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
டெங்குவை ஒழிக்க யோசனை
'ஏடிஎஸ்' பெண் கொசுக்களால் டெங்கு ஏற்படுகிறது. இதனால் உலகில் 2024ல் 1.30 கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்துவதற்கு கலிபோர்னியா பல்கலை விஞ்ஞானிகள் ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர். இதன்படி கொசுக்களின் கேட்கும் திறனே இனப்பெருக்கத்துக்கு வழி வகுக்கிறது. அதாவது பெண் கொசுக்களின் சிறகடிப்பு ஒலியை கேட்டு ஆண் கொசுக்கள் அதனுடன் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே ஆண் கொசுவின் கேட்கும் திறனை நிறுத்தி விட்டால் இனப்பெருக்கத்துக்கு வாய்ப்பிருக்காது. கொசு உற்பத்தியும் குறைந்து விடும் என தெரிவித்துள்னர்.