/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : உயர்கிறதா கடல்நீர்மட்டம்
/
அறிவியல் ஆயிரம் : உயர்கிறதா கடல்நீர்மட்டம்
PUBLISHED ON : ஜன 29, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
உயர்கிறதா கடல்நீர்மட்டம்
கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயு வெளியீடு தொடர்ந்து அதிகரித்தால் 2100க்குள், உலகில் கடல்நீர்மட்டம் 6.2 அடி உயரும். கடற்கரை பகுதிகள் நீரில் மூழ்கும் ஆபத்துள்ளது என சிங்கப்பூர் நனியங் தொழில்நுட்ப பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது. இதற்கு முன் 2023ல் ஐ.நா., வெளியிட்ட ஆய்வில் 2100க்குள் கடல்நீர்மட்டம் 1.9 - 3.2 அடி வரை உயரும் என தெரிவித்திருந்தது. அதேபோல சமீபத்தில் லண்டன் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வில் பருவநிலை மாற்றத்தால் 2099க்குள், ஐரோப்பாவில் 50 லட்சம் பேர் வெப்ப அலையால் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளது.