உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 05, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
பூமிக்கு அப்பால் சூரியன்
நாளை (ஜூலை 6), பூமியில் இருந்து அதிக துாரத்தில் சூரியன் இருக்கும். சூரியனை நீள்வட்டப்பாதையில் பூமி சுற்றுகிறது. இதன்படி பூமி, சூரியனுக்கு அருகிலும் (ப்ரீஹீலியன்), தொலைவிலும் (அப்ஹீலியன்) கடக்கும் நிகழ்வு அமைகிறது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்ற 365.25 நாட்கள் ஆகின்றன. ஆண்டுதோறும் ஜூலையில் (2026ல் ஜூலை 6) பூமி, சூரியனுக்கு தொலைவில் (15.21 கோடி கி.மீ., துாரம்) இருக்கும். இதனால் பூமியில் இருந்து பார்க்க வழக்கத்தை விட சற்று சிறியதாக தெரியும். ஆண்டுதோறும் ஜனவரியில் சூரியனுக்கு அருகில் (14.70 கோடி கி.மீ., துாரம்) பூமி கடந்து செல்லும்.
