/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பழம் - காய் : என்ன வேறுபாடு
/
அறிவியல் ஆயிரம் : பழம் - காய் : என்ன வேறுபாடு
PUBLISHED ON : செப் 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பழம் - காய் : என்ன வேறுபாடு
பழங்களில் வைட்டமின், தாது, நார்ச்சத்துகள் உள்ளன. இவை காயாக இருக்கும் போது இனிப்பாக இருப்பதில்லை. பழமாக மாறும்போது தான் இனிப்பாக மாறுகிறது. காரணம் காய்களில் பிரக்டோஸ் எனும் சர்க்கரை அளவு குறைவாக இருக்கிறது. காய்கள் பழுக்கும் போது பிரக்டோசின் அளவு அதிகமாகிறது. அதனால் பழங்கள் இனிக்கின்றன. பெரும்பாலான பழங்களில் விதைகள் கசப்புச் சுவையாக இருக்கும். உயிரினங்கள் பழங்களைத் தின்றுவிட்டு விதைகளைத் துப்பினால்தான், புதிய தாவரங்கள் உருவாகும் என்பதற்காக இயற்கையே இதுபோல அளித்துள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.