உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 20, 2026 12:24 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
உப்பு கிடைக்குமா...
பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்வு, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பல பாதிப்புகள் உருவாகின்றன. இது உப்பு உற்பத்தியிலும் கடினமான சவாலை உருவாக்கியுள்ளது. உணவுப்பொருட்களில், பயிரிட தேவையில்லாதவற்றில் ஒன்று உப்பு. இருப்பினும் பருவநிலை மாற்றத்தால், பருவம் கடந்து பெய்யும் மழை, உப்புப் பாத்திகளில் உள்ள அடர் உப்புநீரை நீர்த்துப்போகச் செய்து, ஆவியாதல் செயல்முறையை நிறுத்துகிறது. மேலும் திடீர் கனமழை, பாத்திகளில் தயாராக உள்ள உப்பு படிகங்களை கரைத்து அடித்துச் செல்கிறது.
