/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: அலைபேசியால் ஆபத்து...
/
அறிவியல் ஆயிரம்: அலைபேசியால் ஆபத்து...
PUBLISHED ON : செப் 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
அலைபேசியால் ஆபத்து...
டாய்லெட்டில் அலைபேசி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் மருத்துவ மையம், 125 பேரிடம் ஆய்வு நடத்தியது. இதில் மூன்றில் இரண்டு பங்கு பேர் டாய்லெட்டில் அலைபேசி பயன்படுத்துவதாக தெரிவித்தனர். இவர்கள், அலைபேசி பயன்படுத்தாத மற்றவர்களை விட ஐந்து நிமிடம் கூடுதலாக டாய்லெட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவர்களுக்கு மற்றவர்களை விட மூலம் உள்ளிட்ட உடல்நல பாதிப்பு ஏற்படுவதற்கு 48 சதவீத வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.