/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : விலையுயர்ந்த எலும்புக்கூடு
/
அறிவியல் ஆயிரம் : விலையுயர்ந்த எலும்புக்கூடு
PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
விலையுயர்ந்த எலும்புக்கூடு
கோடிக்கணக்கான ஆண்டுக்கு முன் பூமியை தாக்கிய விண்கற்களால் டைனோசர் அழிந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வரலாற்று மியூசியத்தில், உலகின் விலை உயர்ந்த டைனோசர் எலும்புக்கூடு மக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது 'அபெக்ஸ்' என்ற டைனோசரின் புதை படிவத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது. இது 15 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்தது. இதன் உயரம் 11.5 அடி. நீளம் 27 அடி. 2024 ஜூலையில் இது ரூ. 377 கோடிக்கு ஏலம்போனது. இதற்கு முன் 'டி.ரெக்ஸ்' டைனோசரின் எலும்புக்கூடு 2020ல் 229 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.