/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : ஐந்து நிமிட உடற்பயிற்சி
/
அறிவியல் ஆயிரம் : ஐந்து நிமிட உடற்பயிற்சி
PUBLISHED ON : ஏப் 23, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ஐந்து நிமிட உடற்பயிற்சி
இன்றைய சூழலில் நடைபயிற்சி, சைக்கிளிங், நீச்சல் உட்பட ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் வீதம் தினமும் உடற்பயிற்சி செய்வது, உடல்நல, மனநல ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என ஆஸ்திரேலியாவின் எடித் கோவான் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதன்படி வீட்டிலேயே நாற்காலியில் அமர்ந்த நிலையில் சில அசைவுகள், 'புஷ்-அப்' உள்ளிட்ட சில உடற்பயிற்சியில் ஈடுபடுவது தசை வலிமை, நெகிழ்வுத்தன்மை முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

