/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 27, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
நெருப்பு மேல் நோக்குவது ஏன்
வெப்பம், எரிபொருள், ஆக்சிஜன் என மூன்றும் இருந்தால்தான் நெருப்பு உண்டாகும். நெருப்பிலிருந்து வெளிவரும் வெப்ப ஆற்றல் சுற்றியுள்ள காற்றைச் சூடேற்றுகிறது. இது சுற்றிலும் இருக்கும் குளிர்ந்த காற்றைவிட எடை குறைவானது. அதனால் பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி, எடை குறைவான காற்றை, எடை அதிகமான குளிர்ந்த காற்று மேல்நோக்கித் தள்ளுகிறது. எனவேதான் நெருப்பு அனைத்தும் மேல் நோக்கி எரிகிறது. இதுதான் மெழுகுவர்த்தியை தலைகீழாக பிடித்தாலும் அதிலுள்ள நெருப்பு
மேல்நோக்கி எரிவதற்கு காரணம்.
தகவல் சுரங்கம்
போட்டியின்றி தேர்வான எம்.பி.,
ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளரை தவிர யாரும் போட்டியிடவில்லை எனில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். இதன்படி 2024 லோக்சபா தேர்தலில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பா.ஜ., வின் முகேஷ் தலால் போட்டியின்றி எம்.பி.,யாக தேர்வானார். இது லோக்சபா தேர்தல் வரலாற்றில் முதல்முறையல்ல. 1951ல் முதல் லோக்சபா தேர்தலியே ஐந்து பேர் போட்டியின்றி தேர்வாகினர். அடுத்து 1957ல் ஏழு, 1962ல் மூன்று, 1967ல் ஐந்து, 1971ல் ஒருவர், 1977ல் இருவர் தேர்வாகினர். அடுத்து 1980, 1984, 1989 தேர்தலில் தலா ஒருவர் போட்டியின்றி தேர்வாகினர்.

