/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 05, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
புதிய விண்கற்கள்
புதிதாக 27,500 விண்கற்களை அமெரிக்காவின் நாசா முன்னாள் விஞ்ஞானி டாக்டர் எட் லுா தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது. இதில் சில பூமிக்கு அருகே கடந்து செல்லும் ஆபத்தானவை என எச்சரித்துள்ளது. 'டெலஸ்கோப்'க்கு பதிலாக 'டேட்டா சயின்ஸ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர். சூரிய குடும்பம் உருவான போது, கோளாக உருவாகாமல் நின்றுபோன சிறிய பாறை பொருட்கள்தான் விண்கற்கள். 1801ல் இதை முதலில் கண்டுபிடித்தவர் இத்தாலியின் கியூசெப்பே கியாசி. இதுவரை 13.51 லட்சம் விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
உலக சிரிப்பு தினம்
வாழ்க்கையில் புன்னகை முக்கியம். மே முதல் ஞாயிறு ( மே 5) உலக சிரிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. 1998ல் இந்தியாவில் இத்தினம் உருவாக்கப்பட்டது. மன அழுத்தத்துக்கு புன்னகை சிறந்த மருந்து. 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்பர். நகைச்சுவையாக பேசுவது மட்டுமல்ல; நகைச்சுவைக்கு சிரிப்பதும் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. ஒரு கோபம் பல நோய்கள் உருவாக காரணமாக அமையும். அதே நேரத்தில் ஒரு புன்னகை பல நோய்கள், துன்பத்துக்கு மருந்தாக அமையும். அடுத்தவரை காயப்படுத்தாத வகையில் நமது புன்னகை இருக்க வேண்டும்.