/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : பிப் 07, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
பசுமையா.... கண்ணாடியா...
இயற்கை சூழல் உள்ள இடங்களின் அருகே வசிக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும் என சீன ஆய்வு தெரிவித்துள்ளது. 7 - 12 வயதுடைய 2.86 லட்சம் குழந்தைகளிடம் ஆய்வு நடந்தது. இதில் மரம், செடி கொடிகள் உள்ளிட்ட பசுமை பரப்பு இல்லாத இடங்களில் வாழும் குழந்தைகள் பசுமை பகுதிகளை பார்க்க முடியாமல், அதிக நேரம் 'டிவி', கம்ப்யூட்டர், அலைபேசியில் நேரத்தை செலவிட நேர்கிறது. தொடர்ந்து இவ்வாறு பார்ப்பதால் குழந்தைகளின் பார்வை திறன் பாதிக்கப்பட்டு, கண் கண்ணாடி அணியும் சூழல் ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
'டாப் - 4' விருதுகள்
இந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா. இதுவரை 50 பேருக்கு வழங்கப்பட்டன. இதற்கு அடுத்த இடங்களில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் உள்ளன. இவை இந்தியாவின் 'டாப் - 4' விருதுகளாக உள்ளன. இந்த நான்கு விருதுகளையும் வென்ற சாதனையாளர்கள் உள்ளனர். பிரபல இயக்குனர் சத்யஜித்ரே (மேற்கு வங்கம்), ஷெனாய் இசைக்கலைஞர் பிஸ்மில்லா கான் (உத்தர பிரதேசம்), நடிகர் பீம்சென் ஜோஷி (கர்நாடகா), பாடகர், கவிஞர் பூபன் ஹசாரிகா (அசாம்) ஆகிய நால்வரும் இந்த பெருமையை பெற்றவர்கள்.

