/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : பிப் 13, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
தண்ணீர் அளவிடும் முறை
அணைகளில் இருந்து குடிநீர், பாசனம் உள்ளிட்ட தேவைகளுக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அதில் வரும் டி.எம்.சி., என்பது, 1000 மில்லியன் கன அடி என்பதன் ஆங்கில சுருக்கம். ஒரு டி.எம்.சி., தண்ணீர் என்பது 283.17 மெகா லிட்டர். ஒரு மெகா லிட்டர் என்பது, 10 லட்சம் லிட்டர். அணையிலிருந்து நீர் வெளியேறும் வேகம், வெளியேறும் பகுதியின் அளவை வைத்து டி.எம்.சி., கணக்கிடப்படுகிறது. இதை அளக்க, 'அல்ட்ராசோனிக் டோப்ளர்' சாதனம் போன்ற பல மின்னணு சாதனங்கள் வந்துவிட்டன. அணையின் நீர் தேங்கியுள்ள அளவை கன அடியில் அளக்கின்றனர்.
தகவல் சுரங்கம்
காதலர் தினம்
இன்று பிப். 14 'காதலர் தினம்'. இது உருவான கதை சுவராஸ்யமானது. 14ம் நுாற்றாண்டில் ரோம் அரசர் 2ம் கிளாடியஸ், இளைஞர்களை ராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு வரவேற்பு இல்லாததால் காதல், திருமணத்திற்கு தடை விதித்தார். இதை மீறி பாதிரியார் வேலன்டைன், காதலிக்கும் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரது நினைவுநாளையே 'வேலன்டைன் தினமாக' கொண்டாட தொடங்கினர். 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் வேலன்டைன் தினம் 'காதலர் தினமாக' மாறியது