/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 04, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
படித்தவருக்கு ஆயுட்காலம் அதிகம்
கொலம்பியா பல்கலை, கல்வி - வயது பற்றி ஆய்வு நடத்தியது. இதில் அதிகமாக படித்தவர்களின் ஆயுட்காலம், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிக்கும் ஆண்டுகளில் கூடும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும், வயதாவது 2 - 3 சதவீதம் குறைகிறது. குறைந்தளவு கல்வி கற்றவர்களுடன், அதிகம் படித்தவர்களின் உயிரிழப்பு வாய்ப்பு 10 சதவீதம் குறைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது முதல்கட்ட ஆய்வு தான், இதில் இன்னும் ஆய்வு தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
தேசிய பாதுகாப்பு தினம்
தேசிய பாதுகாப்பு குழுமம் 1966 மார்ச் 4ல் உருவாக்கப் பட்டது. இதன் நினைவாக 1972 முதல், தொழிற்சாலை நிர்வாகங்கள், தொழிலாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 4ல் தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நிதி, வருவாய் இழப்பு, சுகாதார பிரச்னை உட்பட மக்கள் சந்திக்கும் பல பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. விபத்து, தொழில்சார் நோய்கள் தேசிய பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்துகிறது. அவை மரணம், உடல் குறைபாடு, பொருட்சேதம் என சமூக சூழலிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.

