/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 06, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
தண்ணீரில் ஆக்சிஜன்
மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் அவசியம். இது மழை, ஆறு, ஏரி, நிலத்தடி என பல வழிகளில் கிடைக்கிறது. அறிவியல் வளர்ச்சியில் தண்ணீரை செயற்கையாக தயாரிக்க முடியும் என நிரூபித்தவர் பிரான்ஸ் விஞ்ஞானி ஆன்டோய்ன் லவாய்ஸியர். 1783ல் சிறுகுழாய் மூலம் ஆக்சிஜன், ஹைட்ரஜனை சரியான விகிதத்தில் ஒரு குடுவையில் புகுத்தி எரித்துப் பார்த்தார். அதில் மெல்ல நன்னீர் உருவானது. அதே போல நீரைப் பிரித்து அதில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் மட்டுமே உள்ளது, நீர் என்பது மூலக்கூறு எனவும் நிரூபித்தார். ஆனால் இதற்கான செலவு மிக அதிகம்.
தகவல் சுரங்கம்
பெரிய நன்னீர் ஏரி
மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் லோக்டாக் ஏரி உள்ளது. இது தெற்காசியாவின் பெரிய நன்னீர் ஏரி என அழைக்கப்படுகிறது. இது சிறு சிறு தீவுகளை உள்ளடக்கியது. ஏரியின் நடுவே கெய்பூல் லாம்ஜாவ் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 40 சதுர கி.மீ. 1966ல் தன்னார்வலர்களால் வன உயிரியல் பூங்காவாக தொடங்கப்பட்டது. 1977ல் தேசியப்பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டது. இது உலகின் ஒரே மிதக்கும் பூங்கா என அழைக்கப்படுகிறது. ஈரமான, பசுமையான காடுகளைக் கொண்டது. குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 1.7 டிகிரி செல்சியஸாக உள்ளது.

