sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

/

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மார் 09, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 09, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவியல் ஆயிரம்

நீரிழிவை உண்டாக்கும் துாக்கமின்மை

நீரிழிவு பாதிப்பு ஏற்படுவதற்கு துரித உணவுமுறை, உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும், துாக்கமின்மையும் முக்கிய காரணம் என பிரிட்டன் ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் பங்கேற்றவர்கள் 10 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர். இதில் தினமும் 7 - 8 மணி நேரம் துாங்குபவர்களை விட, 5 மணி நேரம் துாங்குபவர்களுக்கு 16 சதவீதமும், 2 - 3 மணி நேரம் மட்டுமே துாங்குபவர்களுக்கு 41 சதவீதமும் 'டைப் - 2' நீரிழிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் என கண்டறியப்பட்டது. குறைந்த நேரம் துாங்குபவர்கள் சத்தான உணவு எடுப்பதன் மூலம், பாதிப்பை குறைக்கலாம்.

தகவல் சுரங்கம்

உயரமான பாலம்

உலகில் உயரமான பாலம் பிரான்சின் ஜார்ஜ் பள்ளத்தாக்கில் மில்லவ் - கிரஸ்செல்ஸ் நகரங்கள் இடையே அமைக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதியில் இருந்து துாணின் உயரம் 1104 அடி. பாலத்தின் நீளம் 8070 அடி. அகலம் 105.2 அடி. இரண்டு துாண்களுக்கு இடையிலான அதிகபட்ச இடைவெளி 1122 அடி. மூன்று ஆண்டுகளில் பணி முடிக்கப்பட்டு 2004ல் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. கான்கிரீட், இரும்பினால் அமைக்கப்பட்டது. செலவு ரூ.3094 கோடி. உலகின் இரண்டாவது உயரமான பாலம் துருக்கியின் இஸ்தான்புலில் உள்ளது. துாணின் உயரம் 1056 அடி.






      Dinamalar
      Follow us