/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : 'பிங்க்' வைரம்
/
அறிவியல் ஆயிரம் : 'பிங்க்' வைரம்
PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
'பிங்க்' வைரம்
ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் அரிதான 'பிங்க்' நிற வைரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது போன்ற வைரம் கண்டுபிடிப்பது முதன்முறை இல்லை. இருப்பினும் இந்தளவு எடையில் கண்டறியப்படவில்லை. இதன் நீளம் ஒரு இன்ச். இதில் பாதி 'பிங்க்' நிறமாகவும், மீதி நிறமற்றவையாகவும் உள்ளது. எடை 7.5 கிராம். வைர கற்கள், 300 கோடி ஆண்டுக்கு முன் உருவானவை. இது பூமியில் 150 - 200 கி.மீ., ஆழத்தில் வெப்பமான, அழுத்தமான நிலையில் இருந்து எடுக்கப்படுகிறது. உலகின் பெரிய வைரம் (621.2 கிராம்) 1905ல் தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

