/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: வெள்ளை நிற வானவில்
/
அறிவியல் ஆயிரம்: வெள்ளை நிற வானவில்
PUBLISHED ON : ஏப் 04, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
வெள்ளை நிற வானவில்
மழைபெய்யும் முன், பின் அல்லது காலை, மாலையில் சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் ஏழு வண்ணங்களில் வானவில் தோன்றும். பகலை போல இரவிலும் நிலவு ஒளியில் வானவில் தோன்றும். இதை வெள்ளை வானவில் என அழைப்பர். இரவில் விழும் மழைத்துளி நிலவு ஒளியில் வண்ணங்களாக பிரிந்து நிலவின் எதிர் திசையில் வானவில்லாக தோன்றும். ஆனால் இவை பகல் வானவில்லைப் போல கண்கவர் வண்ணங்களில் பளிச்சென்று தெரியாது. ஏனென்றால் நிலவின் ஒளி, சூரிய ஒளி போல் பிரகாசமாக இருப்பதில்லை. அதனால் சாம்பல், வெள்ளை நிறத்தில் வானவில் காணப்படும்.

