உள்ளடக்கத்திற்கு செல்ல

அறிவியல் ஆயிரம் : செயற்கை நுண்ணறிவும்... தண்ணீரும்
அறிவியல் ஆயிரம் : செயற்கை நுண்ணறிவும்... தண்ணீரும்
PUBLISHED ON : ஜூன் 15, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
செயற்கை நுண்ணறிவும்... தண்ணீரும்
உலகில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) பயன்பாடு பரவலாகி வருகிறது. இந்தியாவில் ஏ.ஐ., துறையில், 2024 - 2025ல் 15 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2030ல் 36 ஆயிரம் கோடி லிட்டராக அதிகரிக்கும் என ஆய்வு தெரிவித்துள்ளது. ஏ.ஐ., தொழில் நுட்பத்துக்கான டேட்டா சென்டர்களில் பயன்படுத்தும் சர்வர்களை குளிர்விப்பதற்கு, ஏ.ஐ.,க்கு தேவையான செமிகண்டக்டர் சிப் உள்ளிட்ட வன்பொருள் (ஹார்டுவேர்) தயாரிப்பதற்கு, இதற்கு தேவையான மின்சார உற்பத்தி (அனல் மின் நிலையம்) போன்றவற்றுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.
