PUBLISHED ON : ஜன 15, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
எப்படி வந்தது 'குதிரைத்திறன்'
ஐரோப்பாவில் முன்பு இயந்திரங்களை இயக்க குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. நவீன நீராவி இன்ஜின்கள் வந்தபோது அவற்றின் திறன்களை கூற, ஒப்பீட்டளவில் குதிரையின் ஆற்றலோடு சமன்படுத்திக் கூறப்பட்டது. அதுவே மாறி 'குதிரை சக்தி' என ஆனது. இதை அறிமுகப்படுத்தியவர் ஸ்காட்லாந்தின் ஜேம்ஸ் வாட். இவர் தயாரித்த நீராவி இன்ஜினை விற்பனை செய்யும்போது, அந்த இன்ஜின் எத்தனை குதிரைகள் செய்யும் வேலைக்கு சமமானது என எடுத்துக்கூறி விற்பனை செய்ய வேண்டியிருந்தது. இப்படிதான் இன்ஜின்களின் ஆற்றல் குதிரை திறனில் அளவிடப்படுகிறது.
தகவல் சுரங்கம்
ராணுவ தினம்
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய ராணுவ தலைமை பொறுப்பு அவர்கள் வசம் தான் இருந்தது. 1949 ஜன., 15ல் இப்பொறுப்பை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் 'கரியப்பா' ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாக ஜன. 15ல் ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. தன்னலம் பார்க்காமல் நாட்டை பாதுகாக்க எல்லையில் பணியாற்றும் நம் ராணுவ வீரர்கள் தான் தேசத்தின் உண்மையான ஹீரோக்கள். வெயில், குளிர், மழை, இரவு, பகல் என பார்க்காமல் மக்களுக்காக பணியாற்றும் ராணுவ வீரர்களை என்றும் போற்றுவோம்.