PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
இந்தியாவின் முக்கிய மின்சாரம்
மின்சார உற்பத்தி முறைகளில் ஒன்று அனல் மின்சாரம். இது வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை எரித்து, அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்தினால் நீராவி உற்பத்தி செய்கிறது.பின் அதனால் நீராவிச்சுழலியை இயக்கி அதனுடன் இணைத்துள்ள ஜெனரேட்டரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் முக்கிய மூலப்பொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இவை அதிகமாக கிடைக்கக் கூடிய இடங்களில், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. இந்தியாவின் மின்சார உற்பத்தியில் 50% இம்முறையில் தான் கிடைக்கிறது.
தகவல் சுரங்கம்
தேசிய வாக்காளர், சுற்றுலா தினம்
இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜன. 25ல் தொடங்கப்பட்டது. இதன் 60வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் விதமாக 2011 ஜன. 25ல் தேசிய வாக்காளர் தினம் தொடங்கப்பட்டது. நாட்டில் ஊராட்சி தலைவர் முதல் பிரதமர் வரை மக்கள் ஓட்டளிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 18 வயது பூர்த்தி செய்த ஒவ்வொருவரும் தவறாமல் ஓட்டளிப்பது ஜனநாயக கடமை.
* இந்தியாவில் கலாசார, பண்பாட்டு இடங்கள் நிறைய உள்ளன. இதை மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக ஜன. 25ல் தேசிய சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது.