PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
வலுவான வலை
சிலந்தி எட்டு கால்கள் கொண்டது. பல வகைகள் உள்ளன. இவை எல்லாமே வலை பின்னுவதில்லை. பூச்சிகளை சிக்க வைப்பதற்காக வலை பின்னுகிறது. வலை வட்டம், எண் கோண வடிவில் இருக்கும். பார்க்கும் போது மென்மையாக தெரியும் இவ்வலை வலுவானது. சிலந்தி வயிற்றின் அடியில், இரண்டு சுரப்பிகள் சுரக்கும் திரவத்தால் வலை பின்னுகிறது. இத்திரவம் மீது காற்று பட்டவுடன் மெல்லிய கம்பி போல் மாறி விடுகிறது. இதில் விழும் பூச்சிகள் தப்பிக்க இயலாது. நெற்பயிர்களுக்கு தீமை விளைவிக்கும் சில பூச்சிகளை உண்பதால் சிலந்திகள் விவசாயிகளுக்கு நண்பனாகவும் திகழ்கிறது.