/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தண்டவாளத்தில் ஜல்லி ஏன்
/
அறிவியல் ஆயிரம் : தண்டவாளத்தில் ஜல்லி ஏன்
PUBLISHED ON : டிச 18, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
தண்டவாளத்தில் ஜல்லி ஏன்
ரயில் தண்டவாளத்தில் பயன்படுத்தும் ஜல்லி கற்களுக்கு 'டிராக் பேல்லஸ்ட்' என பெயர். 6 -- 20 'இன்ச்' உயரம் இக்கற்கள் கொட்டப்பட்டிருக்கும். இவை ரயில் ஓடும் போது ஏற்படும் அதிர்வை தாங்கி, தண்டவாளம் நகராமல் தடுக்கிறது. ரயில் பாதையில் தாவரங்கள் வளர்வதை தடுக்கிறது. தண்ணீரை தேங்க விடாமல் வழிந்தோடவும் செய்கிறது. இதனால் மண் அரிப்பு தவிர்க்கப்படுகிறது. தண்டவாளத்தை இணைக்க நீளமான கான்கிரீட் குறுக்கு மட்டங்களும் ரயில் பாதைகளில் பயன்படுகின்றன. இதற்கு 'ஸ்லீப்பர்' என பெயர். இவை தண்டவாளம் வளையாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.