PUBLISHED ON : ஜூலை 27, 2011 12:00 AM
சிசேரியன் குழந்தைகள்
தாய் மிகவும் கஷ்டப்பட்டு, வேதனையின் விளிம்பிற்கு சென்று குழந்தையைப் பிரசவிப்பதை 'சுகப்பிரசவம்' என்று முரண்பாடாகச் சொல்கின்றோம்.எத்தனை வேதனைகள் அடைந்தாலும், 'சுகப்பிரசவம்' ஆவதைத் தான் அனைவரும் விரும்புவர்.
சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தை களுக்கே, நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் இருக்கும். சமீபத்தில் நடைபெற்ற ஆராய்ச்சிகளில் சிசேரியனில் பிறக்கும் குழந்தைகள், சுகப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை விட, அமைதி யாக இருக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக் கின்றன. இவை வளரும் பருவத்தில் கோபம் போன்றவை குறைவாக இருக்கும். இத்தகைய குழந்தைகள் நல்ல கவன சக்தியுடன் இருக்கும்.சுகப்பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க, ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். இதனை 'கப் போடுதல்' என்பர். இவ்வாறு ஆயுதங்களைப் பயன்படுத்திய சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலைப்பகுதி அழுத்தப் படுவதால், மன அழுத்தம் போன்றவை அதிகமாக இருக்கும்.
தகவல் சுரங்கம்
பெயர்களில் மாற்றங்கள்
இந்தியர்களின் பெயர்களை குறித்து, ஐரோப்பிய நாடுகளின் சமூக விஞ்ஞானிகள் நிறைய ஆராய்ச்சிகள் நடத்துகின்றனர்.இந்தியப் பெயர்கள் பெரும்பாலும் சமயங்களை சார்ந்தே உள்ளன. குல தெய்வம், இஷ்ட தெய்வங் களைச் சார்ந்து பெரும்பாலான பெயர்கள் வைக்கப்பட்டன. பிரசவம் மறுபிறப்பாக மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் கருதப்பட்டது.எனவே பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயரையே வைக்கும் மரபு இருந்தது. தொழில் நிமித்தமாக எந்த ஊரில் குடியேறினார்களோ அந்த ஊரின் இறைவன், இறைவியின் பெயரை வைக்கும் மரபு இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தலைவர்களின் பெயரை வைக்கும் மரபு ஏற்பட்டது. தாத்தா, பாட்டி பெயரை வைக்கும் மரபு இருந்தது.தமிழகத்தில் 1960-களில் தூய தமிழ்ப் பெயரை சூட்டும் மரபு ஏற்பட்டது. வட மொழிப் பெயர் களும் வலிந்து தமிழ்மயமாக்கப்பட்டன. தற்போது இந்தியப் பெயர்கள் சமஸ்கிருதம், உருது, பாலி பெயர்களாக உள்ளன.