sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜூலை 29, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 29, 2011 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷில்லாங் தேநீர்

தேயிலையில் 'கிரீன் டீ' தற்போது பரவலாகி வருவதைப் போன்று, மல்பெரி தேநீர் என்னும் புதிய வகை தேநீர் தற்போது பரவலாகி வருகிறது.பட்டுப்புழுக்கள் வளர்த்து, பட்டுத் தொழில் நடைபெறும் இடங்களில், பட்டுப்புழுக்களுக்கு உணவான மல்பெரி அதிகமாக வளர்க்கப் படுகிறது. இவற்றின் இலைகளை தேயிலையைப் போன்று பயன்படுத்தி தயாரிக்கும் தேநீரே மல்பெரி தேநீராகும்.தேயிலைத் தேநீரைக் காட்டிலும், மல்பெரி தேநீர் அதிக துவர்ப்புத் தன்மை உடையதாக உள்ளது. நம்முடைய உணவு சரிவிகித உணவாக அனைத்து சத்துக்களும் உள்ள உணவாக இருக்க வேண்டும் என்பதைப் போல, நம்முடைய உணவு அறுசுவை களும் நிரம்பிய உணவாக இருக்க வேண்டும் என ஆயுர்வேதம் கூறுகிறது. இந்தியர்களின் உணவில் அறுசுவைகளில் துவர்ப்புச் சத்து தான் குறைவாக உள்ளது. இதனை சரி செய்ய ஷில்லாங்கில் நாள் தோறும் மல்பெரி தேநீர் குடிக்க பரிந்துரை செய்கின்றனர். மல்பெரி தேநீரில், தேயிலைத் தேநீரை விட நச்சுப்பொருட்கள் குறைவாக உள்ளன. அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன..

தகவல் சுரங்கம்

பயண இலக்கியங்கள்

தமிழகத்தில் சுற்றுலாவுக்கு செய்யப்படும் செலவு, தேவையில்லாத வீண் செலவாக கருதப் படுகிறது. இந்தியர்கள் சுற்றுலா செல்வது உலக சுற்றுலா வரைபடத்தில் குறைவாகவே உள்ளது. உலகமயமாக்கலினால் சர்வதேச சுற்றுலாக்கள் வளர்ந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் எதிர்பார்த்த இலக்கினை அடைய வில்லை. தென் மாநிலத்தை விட, வட மாநிலத்தவர் சுற்றுலா செல்வதில் ஆர்வமாக உள்ளனர். எனினும் வட மாநிலத்தவர்கள் சுற்றுலா, பெரும்பாலும் புனித தலங்களைச் சார்ந்தே உள்ளது.புத்தகங்களில் படிப்பதை விட, சுற்றுலாக் களினால் தான் அதிகம் அறிந்து கொள்கிறோம். பயணங்கள் தான் மனிதனை முழுமையாக் கின்றன என்பதை உணர்த்தும் வகையில், ராகுல சாங்கிருத்தியன் 'ஊர் சுற்றிப் புராணம்' என ஒரு புத்தகமே எழுதினார். ஒரு நாட்டினை, நகரினை, இடத்தினை மாறுபட்ட பார்வைகளில் சிந்திப்பவை பயண இலக்கியங்களாகும். இந்த பயண இலக்கியங்கள், சுற்றுலாத்தலங்கள் குறித்து ஆழ்ந்து அறிய உதவுகின்றன.






      Dinamalar
      Follow us