PUBLISHED ON : ஆக 20, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆபத்தில் நீலக்குறிஞ்சி
நீலக்குறிஞ்சி செடிகள் அழியும் தாவரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு (ஐ.யு.சி.என்.,) தெரிவித்துள்ளது. இதிலிருந்து நீலக்குறிஞ்சி மலர்கள் அரிதான தாவரம், பாதுகாக்கப்பட வேண்டிய தாவரம் என தெரிவித்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் சோழா காடுகளில் காணப்படும் புதர்செடி தான் நீலக்குறிஞ்சி. இவை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூ பூக்கின்றன. ஊதா நிறத்திலான இந்த நீலக்குறிஞ்சி மலர்களில் இருந்து தான் நீலமலை என்ற பொருள் படும் நீலகிரி மலை என்ற பெயர் வந்தது.