PUBLISHED ON : ஆக 27, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானவில் எப்போது தோன்றும்
மழைக்காலங்களில் வானத்தில் வண்ணமாய் தோன்றும் வானவில்லை ரசிக்காதவர்கள் இல்லை. வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்லை. பனி மூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத துாசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகளும் காரணம். மழைக்காலத்தில் மேகங்களின் நீர்த்துளிகளில் சூரிய ஒளி ஊடுருவும். அது சிதறலடைந்து, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொலிப்பதால் வானவில் தோன்றுகிறது. கண்களுக்குத் தெரிவது போல வானவில் அரை வட்டமாக இருக்காது. முழு வட்டமாக இருக்கும்.

