/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு
/
தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு
PUBLISHED ON : ஜூலை 15, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : நா.கோவில்பட்டியில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஓராண்டாக பூட்டிக் கிடந்தது.
மக்கள் உப்பு நிறைந்த, தகுதியில்லாத குடிநீரை பயன்படுத்தி வந்தனர். குடிநீர் தொடர்பான தொற்று நோய்களுக்கு ஆளாகினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மேல்நிலை தொட்டியில் இருந்து குழாய்கள் இணைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சப்ளை செய்யப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.